இனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...


                 அண்மை  காலமாக சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து இந்தியா போன்ற வளரும்  நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களிடையே தயாரிப்புகளான சுகர் பிரீ  பிஸ்கட்  முதல் சுகர் பிரீ  டானிக்  வரை கூவி விற்கின்றன.

             ஆனால் இனிப்பு துளசி என்கிற Stevia rebaudiana  மூலிகை  பயிரானது சர்க்கரை நோயாளிகளுக்கு பாரம்பரிய கரும்பு  சர்க்கரைக்கு  மாற்றான சர்க்கரையாக பரிந்துரைக்கப்படுகிறது .

இனிப்பு துளசி பற்றிய ஒரு அறிமுகம் :

          சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி (Stevia rebaudiana) என்பது சூரியகாந்தி குடும்பஅங்கத்தின்ஒரு பிரிவான சிடீவியா எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இனிப்புத் தன்மையைக்கொண்டுள்ள இத்தாவரத்தை, பொதுவாக மிட்டாய் இலை (candy leaf), இனிப்பு இலை (sweet leaf) மற்றும் சர்க்கரை இலை (sugar leaf) எனவும் பிராந்தியப் பெயரால் அழைக்கப்படுகிறது.

     தென் அமெரிக்கா நாடுகளான பிரேசில், மற்றும்  பராகுவே போன்ற மென்மையான ஈரப்பதம் மிகுந்த பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடிய இந்த சீனித்துளசி, ஈரமான சூழ்நிலையில் வளர்ந்தாலும், இதன் வேர்ப் பகுதியில் நீர்த்தேக்கம் உகந்ததல்ல. சீனித்துளசி எனும் இத்தாவரத்தை, இனிப்பு இலைக்காக வளர்க்கப்படுகிறது. சுவையூட்டும் பொருட்களின் ஆதாரமாக உள்ள இந்த தாவரத்தை, பல்வேறு வர்த்தக பெயர்களில் விற்கப்படுகின்றன. சர்க்கரைப் பதிலீடு சரக்காக பயன்படுத்தப்படும் அவை, சிடீவியா (stevia) என பொதுவாக அறியப்படுகின்றன. 

பல்வேறு இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்ய உதவும் சிடீவியால் கிளைகோசைடு எனும் மூலப்பொருள் சீனித்துளசியின் இலையிலிருந்தே பெறப்படுகிறது. மேலும், முக்கியமாக சிடீவோசைடு (stevioside) மற்றும் ரெபாடியோசைடு (rebaudioside) போன்ற மூலப்பொருட்களும் இதிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது, இவை சர்க்கரையின் இனிப்பு சுவையைவிடவும் 250 - 300 மடங்கு கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிப்பு துளசியின் பயன்கள் 
  1. இரத்த அழுத்தம்  மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யாமல் சாதாரண அளவிற்குள் அடக்கும் .
  2. இதனுடைய குறைந்த கலோரி அளவால்  (0)  உடலுக்கு எந்த  பாதிப்பும் வருவதில்லை .
  3. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியால் தயாரிக்கப்படும்  அனைத்து இனிப்பு  வகைகளையும் உண்ணலாம் .
  4. எலும்புகளுக்கு வலுவை தருவதுடன் osteoporosis வரும்  வாய்ப்பையும் குறைக்கிறது .
  5. கேன்சர்  மற்றும் அதிக எடையையும் தடுக்கிறது .
  6. சருமத்தை பாதுகாக்கிறது .

இத்தகைய சிறப்பு வாய்ந்த  இனிப்பு துளசி செடியை எனது பலநாள் தேடலுக்கு பிறகு ஒரு நர்சரியில்   வாங்கி எனது தோட்டத்தில் வளர்த்து வருகிறேன்.இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அதை பயன்படுத்தி பார்த்துவிட்டு அதைப்பற்றி மேலும் பதிவிடுகிறேன் ....


Comments

Post a Comment

Popular posts from this blog

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்

காமராஜர்,சித்தா மற்றும் விவேகானந்தர் கதை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்