குவிந்த புரோகிராம்களை நீக்க...
இணையத்தில் பல்வேறு வசதிகளைத் தரும் எக்கச்சக்கமான புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை இலவசமாகக் கிடைப்பதால், நாம் உடனே டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் சில நாட்களில் அதனை மறந்துவிடுகிறோம்; தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. இப்படி பல புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் தங்கிவிடுகின்றன. இவற்றை எப்போதாவது, கண்ட்ரோல் பேனல் சென்று, ஆட்/ரிமூவ் பிரிவின் மூலம் ஒரு சிலவற்றை நீக்குகிறோம். அப்படி நீக்கும் போதும், அந்த புரோகிராம் சார்ந்த சில ரெஜிஸ்ட்ரி வரிகள் தங்கிவிடுகின்றன. சில பைல்களும் அவ்வாறே கம்ப்யூட்டரில் வைக்கப்படுகின்றன. இதனால் கம்ப்யூட்டரின் செயல்வேகம் மெதுவாகிறது. சில மோசமான வேளைகளில், புரோகிராம்கள் முடங்கியும் போகின்றன. இது போன்ற குறைகளை நீக்கித் தேவையற்ற புரோகிராம்களை முழுமையாக நீக்க இணையத்தில் Absolute Uninstaller என்ற புரோகிராம் கிடைக்கிறது. இது ஆட்/ரிமூவ் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை மேற்கொண்டாலும், அதனைக் காட்டிலும் கூடுதல் திறனுடன் செயல்படுகிறது. தேவையற்ற ரெஜிஸ்ட்ரி கீகள், சார்ந்த டெஸ்க்டாப் ஐகான்கள், ஸ்டார்ட் மெனுவில் எழுதப்பட்ட என்ட்ரிகள் ஆகியவற்றைக் கண்ட...