Wednesday, December 23, 2009

கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்யலாம் !நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...

மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:
மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:
விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்

முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்

திரையில் படங்கள் அலை அலலயாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இனைப்பை சரிபார்க்கவும்
2.வைரஸ் புகுந்துள்ளதா எனப்பார்க்கவும்
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்)

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்லதா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்க்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்

வண்ணக் காட்சி பொருத்தமின்றி இருத்தல்:
டிஸ்பிளேகார்டை, அதன் சிடி உதவியுடன் முறையாக மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்.

Tuesday, December 22, 2009

விண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்!விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன.

1. ஐகால்சி – iCalcy


உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இயக்கிப் பாருங்களேன். இந்த புரோகிராம் http://aviassin.wikidot.com/icalcy என்ற முகவரியில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது.

2. விண்டோஸ் 7 சூப்பர் பார்:


விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியான தகவல்களில் அதன் தோற்றங்கள் சிலவற்றில், சிலருக்கு ஆர்வம் இருக்கலாம். இந்த சிஸ்டத்தின் சைட் பார் விஸ்டாவின் டாஸ்க் பார் போல இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். இந்த விருப்பத்தின் அடிப்படையில் சீன கம்ப்யூட்டர் பொறியாளர் ஒருவர் டாஸ்க் பாரினைச் சற்று மாற்றி விண்டோஸ் 7 சூப்பர் பார் போல அமைத்துத் தந்துள்ளார். இந்த புரோகிராம் இலவசமாக http://flarejune.deviantart.com/art/TaskbarResizeToolforVista104078306 என்னும் முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்த்தும் கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் விசுவல் சி ப்ளஸ் ப்ளஸ் 2008 இல்லை என்று பொருள். அதனை இன்ஸ்டால் செய்து பின் இந்த புரோகிராமினை இயக்க வேண்டும். இந்த விசுவல் சி++ புரோகிராம் கிடைக்க http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=A5C842753B974AB7A40D3802B2AF5FC2&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

3. கிளாஸ் சி.எம்.டி. (GlassCMD):


“டெஸ்க்டாப்பில் கிடைக்கும் விண்டோ எல்லாம், சும்மா பளபளன்னு இருக்கணும்; அடுத்த பக்கம் ஊடுறுவித் தெரியும்படி கண்ணாடியா இருக்கணும்'' என்று என் நண்பர் ஒருவர் கதை அடித்துக் கொண்டிருப்பார். அவரைப் போன்ற விருப்பம் உள்ள நபர்களுக்காகவே கிளாஸ் சி.எம்.டி. என்ற புரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சின்ன புரோகிராம்; எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்; இதைக் கம்ப்யூட்டரில் பதிந்து, அதன் மீது டபுள்கிளிக் செய்தால், சிஸ்டம் ட்ரேயில், கடிகாரம் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது.உங்களுடைய கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை, ஊடுறுவிச் செல்லும் கண்ணாடியாக மாற்றுகிறது. இது உங்கள் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மாற்ற வில்லை. அதனை பின்புறம் உள்ள பொருட்களைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுகிறது. இந்த புரோகிராமினை http://komalo.deviantart.com/art/GlassCMDforVista121457868 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இது ராம் மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் 1 எம்பிக்குக் குறைவாக உள்ளதால், தாராளமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.

4. பயர்பாக்ஸ் கண்ணாடி (Glassy Firefox):


பயர்பாக்ஸ் பிரவுசரின் மிகப் பெரிய பலம் அது தரும் பாதுகாப்பு; அதற்கு அடுத்தபடியாக, அதன் ரசிகர்கள் கூட்டம். பல கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் தீம்ஸ், எக்ஸ்டென்ஷன்ஸ் என்ற பெயரில் பல அரிய, வேடிக்கையான மற்றும் கூடுதல் பயன்தரும் புரோகிராம்களை உருவாக்கி அவற்றை ஆட் ஆன் தொகுப்புகளாகத் தருகிறார்கள். நியோவின் (Neowin) என்பவர் அம்ப்ரூஸ் (Ambroos) என்னும் கிளாஸி பயர்பாக்ஸ் தீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனைப் பதிந்து இயக்க 64 பிட் விண்டோஸ் இயக்கத் தொகுப்பு இருக்க வேண்டும். ஜிமெயில் செக்கர் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டால், நீங்கள் இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். இது பயர்பாக்ஸ் தளத்தில் கிடைக்கவில்லை. கிடைக்கும் முகவரி http://www.neowin.net/forum/index.php?s=ee8053c1716233beb4b6dcb3715500cc&showtopic=746714


5. நோட்பேட் கண்ணாடி (Transparent Notepad):

கிளாஸ் சிஎம்டி போல இது இருந்தாலும் சற்று வித்தியாசமான ஊடுறுவும் கண்ணாடியில் இயங்குவது போல நோட்பேடினை இந்த புரோகிராம் அமைக்கிறது. மற்ற புரோகிராம் போல, ஜஸ்ட் ஒரு கண்ணாடி இன்டர்பேஸ் தராமல், மொத்த நோட்பேட் புரோகிராமினையும் ஒரு கிளாஸ் தட்டில் அமைக்கிறது. ஒரு விதத்தில் வேர்ட்பேட் போலவும் செயல்படுகிறது. அனைத்து பைல்களையும் ஆர்.டி.எப். (.rtf) பார்மட்டில் சேவ் செய்கிறது. இருப்பினும் டி.எக்ஸ்.டி. (.txt) அல்லது எச்.டி.எம்.எல். (.html) பார்மட்டில் சேவ் செய்திடும் ஆப்ஷனையும் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://sourceforge.net/projects/transnote/

6. கிளாஸ் 2கே (Glass 2K):

மற்ற புரோகிராம்கள் போல் கண்ணாடி போன்ற எபக்ட் தராமல், சற்று ஒளி ஊடுருவும் வகையில் இது விண்டோ வினை அமைக்கிறது. ஒவ்வொரு விண்டோவினையும் இவ்வாறு செயல்படுத்துகிறது. தற்போதைக்கு விண்டோஸ் 2000 மற்றும் எக்ஸ்பியில் மட்டும் செயல்படுகிறது. இதைச் செயல்படுத்தும்போது ‘Runtime DLL/OCX File error’ போன்ற எர்ரர் ஏற்பட்டால், இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இதற்கான தீர்வுகளும் கிடைக்கின்றன.

Sunday, December 20, 2009

சிந்தனையை தூண்டும் நீதி,முல்லா,தெனாலி ராமன் கதைகள் PDF வடிவில் உங்களுக்காகநூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக

1.நீதி கதைகள் தொகுப்பு 1

2.நீதி கதைகள் தொகுப்பு2
3.முல்லா கதைகள் தொகுப்பு 2
4.தெனாலி ராமன் கதைகள் 2

Wednesday, December 16, 2009

தமிழ் மருத்துவம் ,நகைச்சுவை நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக


தமிழ் நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக

நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக

1.திருக்குறள் தெளிவுரையுடன்
2.நீங்கள் நலமாக -M.K முருகானந்தன்
3.வடமொழி இலக்கிய வரலாறு -டாக்டர் .கா.கைலாசநாதகுருக்கள்
4.தமிழ் மருத்துவம்
5.தமிழ் கவிதைகள்

6.தமிழ் நகைச்சுவை தொகுப்பு 1
7.தமிழ் நகைச்சுவை தொகுப்பு 2
8.தமிழ் நகைச்சுவை தொகுப்பு 3

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்!


பெரும்பாலும் அனைத்து பிரவுசர்களிலும் பல ஷார்ட் கட் கீகள் ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா, குரோம் என எதனை எடுத்துக் கொண்டாலும் சில ஷார்ட் கட் கீகள் பொதுவாகவே தான் செயல்படுகின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

பல வேளைகளில் நாம் பிரவுசர்களில் அதற்கு முன் பார்த்த தளத்தைப் பார்க்க பின் நோக்கிச் செல்லும் பேக் பட்டனை அழுத்துவோம். இதன் அருகே கீழ் நோக்கியவாறு ஓர் அம்புக் குறியினைப் பார்க்கலாம். இதனை அழுத்தினால் நீங்கள் முன்பு பார்த்த தளங்கள் 5 முதல் 10 வரை கிடைக்கும். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் மீண்டும் பார்க்க விரும்பும் தளத்தைப் பார்க்கலாம். சில தளங்கள் அடுத்தடுத்து கிளிக் செய்து உங்களை முன் நோக்கிப் போகச் சொல்லும். அது போன்ற தளங்களில் நீங்கள் பிரவுஸ் செய்கையில், முதன் முதலில் பார்த்த தளத்திற்குச் செல்ல வீணாகப் பலமுறை பேக் பட்டனை அழுத்த வேண்டியதில்லை. இந்த அம்புக் குறியை அழுத்தி, தளமுகவரிகளைக் கண்டு கிளிக் செய்து பெறலாம்.

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினைத் தவறுதலாக மூடிவிட்டீர்களா? அதன் முகவரி தெரியவில்லையா? கவலை வேண்டாம். கண்ட்ரோல்+ஷிப்ட்+ட்டி (Ctrl+Shft+T) அழுத்துங் கள். இதனை மீண்டும் மீண்டும் அழுத்தினால் அதற்கு முன் மூடிய தளங்கள் வரிசையாகத் திறக்கப்படும். பேக் ஸ்பேஸ் மற்றும் ஆல்ட் + இடது அம்புக் குறி ஒரு தளத்தைப் பின்னோக்கிக் காட்டும். ஆல்ட் + வலது அம்புக் குறி அழுத்தினால் ஒரு தளம் முன்னோக்கிக் காட்டும்.

எப்11 அழுத்தினால் அப்போதைய இணைய தளம் முழுப் பக்கத்திலும் காட்டப்படும். மீண்டும் அழுத்தினால் முந்தைய நிலைக்குத் திரும்பும்.

எஸ்கேப் கீ அழுத்தினால் இணைய தளம் டவுண்லோட் ஆவது நிற்கும்.
Ctrl+ ‘+’ அல்லது ‘’ அழுத்தினால், இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் எழுத்தின் அளவு கூடும், குறையும்.
.Com என்று முடியும் தளத்தின் முகவரியை முழுமையாக்க தளத்தின் பெயரை மட்டும் டைப் செய்து Ctrl +Enter அழுத்தினால் போதும்.
.net என முடியும் தளத்திற்கு Shift + Enterஅழுத்த வேண்டும்.
.org என்பதில் முடியும் தளப் பெயராக இருந்தால், பெயரை மட்டும் டைப் செய்து Ctrl + Shift + Enter அழுத்தவும்.
ஏதேனும் விண்டோவில் உங்களுடைய தகவல்களை நிரப்பி இருக்கிறீர்கள். இவை அனைத்தையும் நீக்கிட Ctrl + Shift + Del அழுத்தவும்.
Ctrl + D அழுத்தினால் அப்போதைய தளத்திற்கு புக்மார்க் ஏற்படுத்தப்படும்.
Ctrl + I அழுத்தினால் அப்போதைய புக்மார்க்குகள் காட்டப்படும்.
Ctrl + J அழுத்தினால் டவுண்லோட் விண்டோ காட்டப்படும்.
Ctrl + N கீகளுக்கு புதிய பிரவுசர் விண்டோ திறக்கப்படும்.
Ctrl + P அப்போதைய பக்கத்தினை அச்சடிக்கும்.
Ctrl + T புதிய டேப் ஒன்றைத் திறக்கும்.
Ctrl + F4 அல்லது Ctrl + W அப்போது தேர்ந்தெடுத்த டேப்பினை மூடும்.
திறக்கப்பட்ட டேப்கள் வழியே செல்ல Ctrl + Tab பயன்படுத்த லாம்.
ஸ்பேஸ் பார் (Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம். ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift + Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் மேலாகச் செல்லலாம்.

இணைய தளம் ஒன்றில் ஏதேனும் லிங்க் இருந்தால் அதனை புதிய விண்டோவில் திறக்க ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த லிங்க் மீது கிளிக் செய்திடவும். அல்லது அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், புதிய டேப், புதிய விண்டோவில் அதனைத் திறக்கும்படி செய்திடலாம்.

Tuesday, December 15, 2009

பயர்பாக்ஸ் பாதுகாப்பு!


இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக பிளாக்குகள் அமைப்பவர்களிடையே, பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடிய வசதி, பயன்படுத்த எளிமையான இன்டர்பேஸ், நம்பிக்கை தரும் இயக்க தன்மை ஆகிய இதன் சிறப்புகளே, பலரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு இதனைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன. அனைத்து இன்டர்நெட் பிரவுசர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் புரோகிராம்கள் மற்றும் கெடுதல் விளைவிப்பதற்காகவே எழுதப்படும் புரோகிராம்கள் பிரவுசர் வழியாக வந்துவிடுகின்றன. பொதுவாக ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில் அடிப்படை யில் ஒரு சில பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை பழகிப் போனதால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புபவர்கள் இவற்றை மீறிச் செயல்படும் வகையில் அவற்றை வடிவமைத்து விடுகின்றனர். எனவே தொடர்ந்து பிரவுசரைப் பாதுகாக்கும் வகையில் நாம் அதனைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர், கம்ப்யூட்டரை, இது வைரஸ் போன்ற தீய செயல்களை மேற்கொள்ளும் தொகுப்புகளிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களை சப்போர்ட் செய்கிறது. அத்துடன் பயர்பாக்ஸ் பிரவுசருக்கென வடிவமைக் கப்பட்டுள்ள பல ஆட் ஆன் தொகுப்புகளும் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றையும் பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்கிறது. வங்கிக் கணக்குகள் கையாளுதல், ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் செய்து வாங்குதல், அவற்றிற்குப் பணம் செலுத்துதல், சோஷியல் நெட்வொர்க் கிங்கில் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளல், கல்வி கற்றல் போன்ற பணிகளில் நாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துவதால், ஒரு பாதுகாப்பான சூழ்நிலை நமக்கு அவசியமாகிறது. மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் தரப்பட்டுள்ள ஆட்–ஆன் தொகுப்பு களிலிருந்து சிறப்பாகச் செயல்படும் சில தொகுப்புகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.

1. Adblock Plus:
இந்த ஆட் –ஆன் தொகுப்பு வாரந்தோறும் ஏறத்தாழ 8 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பேனர்கள், விளம்பரங்களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களை முற்றிலுமாய்த் தடுக்கிறது. கிடைக்கும் இணையதள முகவரி: http://addons.mozilla.org/enUS/firefox/addon/1865 இந்த தொகுப்பைப் பதிந்த பின்னர், ஏதேனும் பேனர் விளம்பரம் வந்தால், அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கான்டெக்ஸ்ட் மெனுவில் Adblock Plus என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அந்த பேனர் மீண்டும் ஒரு முறை அந்த கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்படமாட்டாது. அல்லது தொகுப்பை முதலில் பயன்படுத்தத் தொடங்குகையில் பில்டர் பயன்பாட்டினை இயக்கிவிட்டால் இது போன்ற பேனர் விளம்பரங்களை அண்டவிடாது.


2. Better Privacy:
பொதுவாக குக்கிகளால் நமக்கு சில நன்மைகள் இருந்தாலும், பல குக்கிகள் நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் வேலைக்கே அனுப்பப்படுகின்றன. இவற்றை நம் பிரவுசிங் முடிந்த பின்னர் அழித்துவிடலாம். ஆனால் சில குக்கிகள் அழிக்கப்பட முடியாத வகையில் உருவாக்கப்பட்டு பதிக்கப்படுகின்றன. இவற்றை சூப்பர் குக்கிகள் என அழைக்கின்றனர். இவற்றிலிருந்தும் பாதுகாக்கும் வேலையை இந்த ஆட் ஆன் புரோகிராம் தருகிறது. இந்த ஆட் ஆன் புரோகிராமினை https://addons.mozilla.org/enUS/firefox/addon/6623 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த பிளாஷ் குக்கிகளை எல்.எஸ்.ஓ. குக்கிகள் எனவும் அழைக்கின்றனர். இவை நம் கம்ப்யூட்டரில் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வகையில் பதியப்படும். ஒரு குக்கியின் அளவு 100 கேபி. வழக்கமான சாதாரண குக்கியின் அளவு 4 கேபி மட்டுமே. இந்த குக்கிகளை பிரவுசர்கள் அறிவதில்லை. எல்.எஸ்.ஓ. குக்கிகளை பிரவுசர்களாலும் அழிக்க முடிவதில்லை. இந்த வகை குக்கிகள் சிஸ்டத்தில் பதிந்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாகப் பெற்று, நாம் அறியாமலேயே மற்ற கம்ப்யூட்டருக்கு அனுப்பும் தன்மை கொன்டவை.
பிளாஷ் குக்கிகள் எப்போது சென்ட்ரல் சிஸ்டம் போல்டரில் தான் பதியப்படுகின்றன. எனவே இவை நீக்கப்படாது. நீக்குவதும் சிரமம். Better Privacy புரோகிராம் ஒவ்வொரு முறை நீங்கள் பிரவுசரை மூடும்போது, இவை அனைத்தையும் நீக்கிவிடுகிறது. அல்லது ஒவ்வொரு பிளாஷ் குக்கியாக இந்த புரோகிராம் மூலம் பெற்று அவற்றை நீக்குவதா, வைத்துக் கொள்வதா என நீங்கள் தீர்மானிக்கலாம்.

3. No Script: இணையத்தில் எந்த வகையில் நம்மை அழிக்கும் புரோகிராம்கள் வரும் என்று சொல்ல முடியாத வகையில் பல வகை புரோகிராம்கள் உள்ளன. இவற்றில் ஸ்கிரிப்ட் என்பதுவும் ஒன்று. இதிலிருந்து பாதுகாக்கும் வழிகளை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த புரோகிராமினை https://addons.mozilla.org/enUS/firefox/addon/722 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டின் சிறந்த புரோகிராமாக இது விருது பெற்றது. பிரவுசருக்கான சரியான பாதுகாப்பினைத் தருகிறாது. இந்த புரோகிராம் ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றை நாம் அனுமதிக்கும் நேரத்தில், அனுமதிக்கும் தளங்களில் இருந்து வந்தால் மட்டுமே இயங்க வைக்கும். இந்த புரோகிரா மினைப் பயன்படுத்துவது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு http://noscript.net/faq என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

4. WOT Web of Trust:
இணையப் பயன்பாட்டின் போது, நம்முடைய கம்ப்யூட்டருக்குள் நம் அனுமதியின்றி சிலர் ஊடுருவி, பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பார்கள். இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் இந்த புரோகிராம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும். https://addons.mozilla.org/enUS/firefox/addon/3456 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஆபத்து நிறைந்த இணைய தளங்களுக்கு நீங்கள் செல்கையில் இது பலத்த எச்சரிக்கையினைத் தரும். ஓர் இணைய தளம் ஸ்பேம் மற்றும் மால்வேர்களை அனுப்ப முயற்சிக்கையில் இந்த புரோகிராம் அந்த செயலை மோப்பம் பிடித்து அறிந்து உடனே எச்சரிக்கை கொடுத்து, நம்மை அந்த தளத்தின் இணைப்பைத் துண்டித்துக் கொள்ளச் சொல்லும். இந்த புரோகிராமில் பல லட்சம் தளங்களின் தன்மை குறித்த தகவல் பதியப்பட்டுள்ளது. இந்த புரோகிராம் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களுக்கும் சப்போர்ட்டுக்கும் http://www.mywot.com/support என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

5. Stealther: நாம் இணையத்தில் உலா வருகையில், தகவல்களைத் தேடுகையில், இமெயில் களைப் பெறுகையிலும் அனுப்பும்போது நம் இணையப் பயணம் குறித்த பல தடயங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ், டிஸ்க் கேஷ், பைல் ஹிஸ்டரி, படிவங்களில் தரப்படும் தகவல்கள் என இவை பலவகைப்படுகின்றன. இது போன்ற எந்த தடயமும் இல்லாமல் இந்த புரோகிராம் பார்த்துக் கொள்கிறது. இதனை https://addons.mozilla.org/enUS/firefox/addon/1306 என்ற முகவரியில் பெறலாம். இந்த புரோகிராம் நாம் பிரவுசரை இயக்கியவுடன் தானும் இயங்கி தடயங்களை ஏற்படுத்தும் புரோகிராம் பகுதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.

6. Roboform Toolbar: நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இந்த புரோகிராம் உதவுகிறது. https://addons.mozilla.org/enUS/firefox/addon/750 என்ற தளம் இந்த புரோகிராமைத் தருகிறது. பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்து நாம் அவற்றை முறையாகவும் தவறின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.

7. Key Scrambler Personal: நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் மற்றும் பிற முக்கிய தகவல்களை, நாம் அறியாமலேயே நம் கம்ப்யூட்டர் களுக்குள் அமர்ந்து அறியும் புரோகிராம் களில் ஒரு வகை கீ லாக்கர் என்பதாகும். இவை நாம் அழுத்தும் கீகளைப் பதிவு செய்து பின் இதனைப் பதித்தவருக்குத் தரும். இன்டர்நெட் மையங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பொது கம்ப்யூட்டர்களில் சிலர் இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்துவார்கள். ஏன், நம் கம்ப்யூட்டர்களில் பிறரை அனுமதித்தால், நம் அனுமதியில்லா மலேயே அவர்கள் இந்த வேவு பார்க்கும் வேலையை மெற்கொள்ளலாம். இத்தகைய கீ லாக்கர்கள் புரோகிராம்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது இந்த Key Scrambler Personal புரோகிராம். இதனை https://addons.mozilla.org/enUS/firefox/addon/3383 என்ற முகவரியிலிருந்து பெறலாம். பிரவுசர் பாதுகாப்பு என்பது நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு தடுப்பு வழியாகும். அப்போதுதான் நாம் நிம்மதியாக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

Monday, December 14, 2009

பல்சுவை தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்


பல்சுவை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக

1.வைரமுத்து கவிதைகள்
2.தமிழ் சிறுகதை தொகுப்பு
3.சுனாமி பற்றிய ஒரு அறிவியல் விளக்கம்
4.மறக்க முடியாத கலைஞர்கள் மற்றும் படைப்புகள்
5.பாரதியார் பகவத் கீதை
6.முதல் பௌதிக விஞ்ஞானி கலிலியோ

சிறந்த பத்து இலவச மென்பொருட்களின் இணைப்புகள்சிறந்த பத்து இலவச மென்பொருட்களின் இணைப்புகள்

1 கம்ப்யூட்டரை வைரஸில் இருந்து பாதுகாக்க
Free AVG Antivirus
2. உங்கள் கம்ப்யூட்டரையும், முக்கிய தகவல்களையும் இணைய திருடர்களிடம் இருந்து பாதுகாக
Free PC Tools Firewall
3. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்களுக்கு விருப்பமான வீடியோ மற்றும் ஆடியோவை பார்த்து, கேட்டு மகிழ
Free VLC Media Player 1.0.2
4. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோ மீடியா பிளேயரின் மூலமாக அனைத்து விதமான வீடியோ டைப்புகளையும் தடை இன்றி இயக்க
Free K-Lite Mega Codec Pack 5.1
5. அனைத்துவிதமான ஆடியோ, வீடீயோ மற்றும் போட்டோக்களையும் நீங்கள் விரும் டைப்புக்கு மாற்ற
Free Format Factory
6. உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரை ஆன் லைனில் தொடர்புகொண்டு அதன் பிரட்ச்சனைகளை சரி செய்ய
Team Viewer
7. உங்கள் போட்டோக்களை பார்க்க, எடிட் செய்ய, இணையத்தில் சேர்த்துவைக்க
GOOGLE PICASA
8. போட்டோசாப் மென்பொருளுக்கு இனையாக உங்கள் போட்டோவை நீங்கள் நினைத்தவாறு டிசைன் செய்ய
GIMP PHOTO DESIGNER
9. மைக்ரோ சாப்ட் ஆபீஸ் மென்பொருளுக்கு இனையாக எக்ஸெல், வேர்ட், அக்ஸஸ், பவர்பாய்ண்ட் போன்றவற்றை இலவசமாக பயன்படுத்த
OPEN OFFICE ORG
10. அடோப் ரீடருக்கு இனையாக மிகக்குறைந்த MB அளவில் பிடிஎப் ரீடரை பயன்படுத்த
FOXIT READER

Sunday, December 13, 2009

சிறுவர் நீதி கதை நூல்கள் மற்றும் பல நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்
சிறுவர் நீதி கதை நூல்கள் மற்றும் பல நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக

1.முல்லா கதைகள்

2.மரியாதை ராமன் கதைகள்
3.தமிழ் சிறுகதைகள் தொகுப்பு
4.பொள்ளாச்சி நேசனின் சிறுவர் கதைகள்
5.ராமகிருஷ்ணன் -அயல் சினிமா
6.சரித்திர கதைகள்
7.சிறுவர் நீதி கதைகள்

Saturday, December 12, 2009

தினமணி தலையங்கம் மற்றும் கட்டுரைகள் PDF வடிவில் உங்களுக்காக


அனைவராலும் விரும்பி படிக்கப்படும் தினமணி தலையங்கம் மற்றும் கட்டுரைகள் PDF வடிவில் உங்களுக்காக

பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக

2.தின மணி கட்டுரைகள் தொகுப்பு - பாகம் 2

Friday, December 11, 2009

அப்துல் கலாமின் நக்கீரன் தன்னம்பிக்கை தொடர் உங்களுக்காக PDF வடிவில்


அப்துல் கலாமின் நக்கீரன் தன்னம்பிக்கை தொடர் உங்களுக்காக PDF வடிவில்
பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக
அப்துல் கலாமின் நக்கீரன் தன்னம்பிக்கை தொடர்


கலாமின் மாணவ-மாணவிகளுக்கான பத்து உறுதிமொழிகள்!

1. நான் எனது வாழ்க்கையில் நல்லதொரு இலட்சியத்தை மேற்கொள்வேன்.
2. நன்றாக உழைத்துப் படித்து, என வாழ்க்கையிலே மேற்கொண்ட இலட்சியத்தை அடைய முற்படுவேன்.
3. நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்துபேருக்காவது எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுப்பேன்.
4. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.
5.மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும்ஐந்துபேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.
6. துயருறும் ஐந்துபேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரைத் துடைப்பேன்.
7. நான் ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்துகொள்வேன்.
8. நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொண்டு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
9. நான் என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண்குலத்திற்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் அளிப்பேன்.
10. நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர்விடச் செய்வேன்.


Thursday, December 10, 2009

பெரியார் நூல்கள் மற்றும் சில நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்பெரியார் நூல்கள் மற்றும் சில நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

1.சினிமா ஆசையில் சீரழிந்த பெண்கள் -J .பிஸ்மி

2.பெண் எப்படி அடிமையனாள்-பெரியார்
3.பெரியாரின் சுயசரிதை
4.பொது அறிவு -2009
5.முப்பது வகை ஐஸ் டிஷ் -வள்ளியம்மை பழனியப்பன்

Wednesday, December 9, 2009

தினமணி கட்டுரைகள் உங்களுக்காக PDF வடிவில் .


தினமணியில் வெளிவந்த கட்டுரைகள் உங்களுக்காக PDF வடிவில் .

கட்டுரைகளை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக

1.தினமணி கட்டுரைகள் -பாகம் 1

Tuesday, December 8, 2009

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..


தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..
பதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட நூலின் மேல் சொடுக்குக .....

1.மார்க்சியமும் இலக்கியமும் -----A.J கனகரத்னா
2.இஸ்லாத்தின் தோற்றம் -எம்.எஸ்.எம் .அனாஸ்
3.இஸ்லாமிய வரலாற்று கதைகள் -எம்.ஏ.ரஹ்மான்
4.பாரிஸ் கதைகள் -கே .பி.அரவிந்தன்
5.சோவியத் யூனியன் முடிவு -டேவிட் நோர்த்
6,பாலர் பராமரிப்பு -கா.வைதீஸ்வரன்
7.ஆரியர் ஆதி வரலாறும் பண்பாடும் -வி .சிவசாமி
8.இந்திய தத்துவ ஞானம் -கி .லக்ஷ்மணன்

Sunday, December 6, 2009

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்


தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக

1.களிமண் பதிவு முதல் கணினி பதிவுவரை -இ.கிருஷ்ணகுமார்
2.மோகவாசல் -ரஞ்சகுமார் சிறுகதைகள் தொகுப்பு
3.மகாகவி பாரதி வாழ்க்கை வரலாறு -எ.ஸ்.திருசெல்வன்
4.புதியதோர் உலகம் -கோவிந்தன்
5.அறிவியல் சிந்தனை
6.நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் -அந்தனி ஜீவா

ஈழத்து கவிதை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

ஈழத்து கவிதை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக

1.மரணத்துள் வாழும் ஈழத்து கவிதைகள்
2.பதுங்கு குழி நாட்கள் -பா.அகிலன் கவிதைகள்
3.மண் பட்டினங்கள் -நிலாந்தன் கவிதைகள்
4.விலங்கிடப்பட்ட மானுடம் -சுல்பிகா கவிதைகள்
5.அகமும் புறமும் -வில்வரத்தினம் கவிதைகள்
6.அழியா நிழல்கள் - M.A நுக்மான் கவிதைகள்

Saturday, December 5, 2009

சாரு,அசோகமித்ரன் பேட்டி-உங்களுக்காக PDF வடிவில்


இலக்கியவாதிகளின் பேட்டி உங்களுக்காக PDF வடிவில்

1.தீராநதிக்காக சாரு நிவேதிதா அளித்த பேட்டி

2.தீராநதிக்காக அசோகமித்ரன் பேட்டி

Friday, December 4, 2009

இன்னும் வித விதமான தமிழ் நூல்கள் உங்களின் அறிவு பசிக்காக PDF வடிவில்


இன்னும் வித விதமான தமிழ் நூல்கள் உங்களின் அறிவு பசிக்காக PDF வடிவில்

நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க

1.சாவியின் -வாஷிங்டன் திருமணம்
2.சேரனின் -நீ இப்போது இறங்கும் ஆறு
3.சேரனின்-உயிர் கொல்லும் வார்த்தைகள்
4.சேரனின்-டூரிங் டாகீஸ்
5.எட்வர்ட் ஸ்னோவின் -ஒரு கம்முனிஸ்ட் டின் உருவாக்கம்
6.இந்து மகேஷின் -மேனியை கொல்வாய்
7.ஜாக்கி வாசுதேவின் -அத்தனைக்கும் ஆசை படு
8.அரவிந்தனின் -கனவின் மீதி
9.செல்வபெருமாளீன் -மே தினம்
10.தங்கராசன் அடிகளாரின் -அண்டவும் பிண்டமும்
11.ஸ்ரீ சாய் சரிதம்

Thursday, December 3, 2009

A.முத்துலிங்கம் நூல்கள் உங்களுக்காக வடிவில்


A.முத்துலிங்கம் நூல்கள் உங்களுக்காக வடிவில்

நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க
1.முத்துலிங்கம்- கதைகள்
2.முத்துலிங்கம் -அங்கே இப்போ என்ன நேரம்
3.முத்துலிங்கம்-மகாராஜாவின் ரயில் வண்டி
4.முத்துலிங்கம்-அக்கா
5.முத்துலிங்கம்-திகட சாகரம்
6.முத்துலிங்கம்-வம்ச விருத்தி

Wednesday, December 2, 2009

தமிழ் ஈழம் பற்றிய நக்கீரன் வரலாற்று தொடர் உங்களுக்காக PDF வடிவில்

தமிழ் ஈழம் பற்றிய நக்கீரன் வரலாற்று தொடர் உங்களுக்காக PDF வடிவில்

தேவியர் இல்லம் வலைபூவரின் வேண்டுகொளுகிணங்க நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் ஈழம் பற்றிய வரலாற்று தொடர் ...

பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்க் சொடுக்குக
1.தமிழ் ஈழம் வரலாற்று தொடர்

வாழ்க்கை வரலாற்று நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

வாழ்க்கை
வரலாற்று நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்
பதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட லிங்க் சொடுக்குக
1.காமராஜர் வரலாறு
2.பெரியார் வரலாறு
3.உ .வே .சாமிநாத அய்யர் வரலாறு
4.சீரடி சாய்பாபா வரலாறு

Monday, November 30, 2009

ஜெய காந்தன் மற்றும் ரா.கார்த்திகேசு சிறுகதை தொகுப்புகள் மற்றும் நாவல்கள் PDF வடிவில் உங்களுக்காக
ஜெய காந்தன் மற்றும் ரா.கார்த்திகேசு சிறுகதை தொகுப்புகள் மற்றும் நாவல்கள் PDF வடிவில் உங்களுக்காக

நூல்களை படிக்க கீழ்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க


1.ஜெய காந்தன் சிறுகதை தொகுப்பு 1
2.ஜெய காந்தன் சிறுகதை தொகுப்பு 2
3.ஜெய காந்தன் சிறுகதை தொகுப்பு 3
4.ரா.கார்த்திகேசு சிறுகதை தொகுப்பு 1
5.ரா.கார்த்திகேசு சிறுகதை தொகுப்பு 2
6.ரா.கார்த்திகேசு நாவல் -காதலினால் அல்ல

Sunday, November 29, 2009

தீபம் .நா. பார்த்தசாரதியின் நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்பு PDF வடிவில் உங்களுக்காக

தீபம் .நா. பார்த்தசாரதியின் நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்பு PDF வடிவில் உங்களுக்காக

நூல்களை படிக்க கீழ்க்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க

1.நா.பார்த்தசாரதியின் சிறுகதை தொகுப்பு
2.நா.பார்த்தசாரதியின் நாவல் கபாடபுரம்
3.நா.பார்த்தசாரதியின் நாவல் ஆத்மாவின் ராகங்கள்
4.நா.பார்த்தசாரதியின் நாவல் நெஞ்ச கனல்
5.நா.பார்த்தசாரதியின் நாவல் பிறந்த மண்
6.நா.பார்த்தசாரதியின் நாவல் ராணி மங்கம்மாள்

Saturday, November 28, 2009

விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகள்(பாகம் 1)PDF வடிவில் உங்களுக்காக


விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகள் PDF வடிவில்

நூல்களை படிக்க கீழ்க்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க

1.அணு விஞ்ஞானி ராஜா ரமண்ணா

2.விண்வெளி விஞ்ஞானி கல்பனா சாவ்லா
3.கணித மேதை ராமானுஜம்
4.வானவியல் விஞ்ஞானி கெப்ளர்
5.வானவியல் விஞ்ஞானி கோபெர்நிகஸ்

Thursday, November 26, 2009

வை. கோ நூல்கள் உங்களுக்காக PDF வடிவத்தில்


வை. கோ நூல்கள் உங்களுக்காக PDF வடிவத்தில்
நூல்களை படிக்க கீழ்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க ..

1.வை .கோ. வின் பெண்ணின் பெருமை

2.வை .கோ. வின் தமிழ் இசை தேன்
3.வை .கோ. வின் தணலும் தன்மையும்
4.வை .கோ. வின் வரலாறு சந்தித்த வரலாறுகள்

Wednesday, November 25, 2009

கல்கி ரா.கிருஷ்ணா மூர்த்தி நாவல்கள் PDF வடிவத்தில்

கல்கி ரா.கிருஷ்ணா மூர்த்தி நாவல்கள் PDF வடிவத்தில் உங்களுக்காக

நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் இ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்க

1.கல்கியின் அலை ஓசை

2.கல்கியின் மோகினி தீவு

3.கல்கியின் பார்த்திபன் கனவு

4.கல்கியின் பொன்னியின் செல்வன்

5.கல்கியின் சிவகாமியின் சபதம்


6.கல்கியின் தியாக பூமி

Tuesday, November 24, 2009

Windows Vista Thems for Windows XP உங்களுக்காக .....


Windows Vista Thems for Windows XP உங்களுக்காக .....WIN RAR பைல்

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இ சொடுக்குக ...

1.Windows Vista Thems for Windows XP

Monday, November 23, 2009

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்
ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்
நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க ..

1.ரமணி சந்திரனின் -இனியெல்லாம் நீயல்லவோ
2.ரமணி சந்திரனின்-காக்கும் இமை நான் உனக்கு
3.ரமணி சந்திரனின்-நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
4.ரமணி சந்திரனின்-என் சிந்தை மயங்குதடி
5.ரமணி சந்திரனின்-உள்ளமதில் உன்னை வைத்தேன்

Sunday, November 22, 2009

டாக்டர் .மு.வரதராசனாரின் படைப்புகள் உங்களுக்காக PDF வடிவத்தில்


டாக்டர் .மு.வரதராசனாரின் படைப்புகள் உங்களுக்காக PDF வடிவத்தில்


நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் ஐ சொடுக்கி பதிவிறக்கம் செய்க ...

1.டாக்டர் .மு.வரதராசனாரின் நாவல் -அகல் விளக்கு
2.டாக்டர் .மு.வரதராசனாரின் புதினம் -நெஞ்சில் ஒரு முள்
3.டாக்டர் .மு.வரதராசனாரின் புதினம்-பெற்ற மனம்
4.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை1 -தேங்காய் துண்டுகள்
5.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை2-வாய் திறக்க மாட்டேன்
6.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை3-எதையோ பேசினார்
7.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை4-கட்டாயம் வேண்டும்
8.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை5-விடுதலையா ?
9.டாக்டர் .மு.வரதராசனாரின் சிறுகதை6-எவர் குற்றம் ?

Saturday, November 21, 2009

குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் தொடர்கள் PDF வடிவத்தில்குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் தொடர்கள் PDF வடிவத்தில் 7.இளையராஜாவின் -வாழ்க்கை வரலாறு

Friday, November 20, 2009

பாவேந்தர் பாரதிதாசன் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ...


நூல்களை படிக்க கீழ்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க

1.பாரதிதாசனின் -இருண்ட வீடு

2. பாரதிதாசனின்-குடும்ப விளக்கு
3.பாரதிதாசனின்-அழகின் சிரிப்பு
4. பாரதிதாசனின்-பாண்டியன் பரிசு
5 பாரதிதாசனின்-தமிழ் இயக்கம்
6.பாரதிதாசனின்-தமிழச்சியின் கதை
7.பாரதிதாசனின்-காதல் நினைவுகள்
8.பாரதிதாசனின்-இசை அமுது
9.பாரதிதாசனின்-எதிர்பாராத முத்தம்
10.பாரதிதாசனின்-இளைஞர் இயக்கம்

Thursday, November 19, 2009

தபூ சங்கர் கவிதைகள் PDF வடிவில் உங்களுக்காக ..

தபூ சங்கர் கவிதைகள்

கீழ்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க ..

1.தபூ சங்கர் கவிதைகள் -தேவதைகளின் தேவதை
2.தபூ சங்கர் கவிதைகள்-வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் ?
3.தபூ சங்கர் கவிதைகள்-விழி ஈர்ப்பு விசை

புவி சூடாதல் பற்றிய கட்டுரை PDF வடிவில் உங்களுக்காக ..


20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது. சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது.[1][A] இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது.[1]கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950 வரை ஞாயிற்றுக் கதிர் வீசல் வேறுபாடுகள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி சூடாதலுக்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு முடிவு செய்துள்ளது. எனினும் இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் புவி குளிமையாதலும் நடைபெற்றுள்ளது.[2][3] இந்த அடிப்படையான முடிவுகள், ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பட[4] 70க்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.[B] ஒரு சிறு எண்ணிகையிலான அறிவியலாளர்கள் இந்த முடிவுகளுடன் உடன்படவில்லை.

தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாதிரிகளின் எதிர்காலா மதிப்பீடுகள் இருபத்தொறாம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 1.1 தொடக்கம் 6.4 °C வரை (2.0 - 11.5 °F) கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.[1] ஒவ்வொரு தட்பவெப்பநிலை மாதிரியும் வெவ்வேறான அளவு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் வெப்பநிலை கூட்டும் திறனையும் எதிகால உற்பத்தி அளவுகளையும் பயன்படுத்துவதால் தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. புவி சூடாதல் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்காது என்பது உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளும் இந்த தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகளில் காணப்படுகிறன. கூடுதலான ஆய்வுகள் 2100 ஆம் ஆண்டு வரை கருதியே செய்யப்பட்டுள்ளன எனினும், வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வு முற்றாக நிறுத்தப்பட்டாலும் பெருங்கடல்களின் பாரிய வெப்பக்கொள்ளளவு, வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் நீண்ட ஆயுட்காலம் என்பவற்றைக் கருதும் போது 2100 ஆம் ஆண்ட்டுக்கு அப்பாலும் புவி சூடாதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[5][6][7]

கூடிவரும் புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும், மேலதிகமாக இதில் மிதவெப்ப மண்டல பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும் அடங்கலாம்.[8]பனியாறுகள், நிலை உறை மண், கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கிப் தொடந்ந்து பின்வாங்கும் என் எதிர்வுக்க்கூறப்படுகிறது. சூடாதல் விளைவு ஆர்க்டிக் பகுதியில் கூடுதலாக காணப்படும். சீரற்ற தட்பவெப்பநிலை நிகழ்வுகளின் கடுமை கூடுதல், உயிரின அழிவு வேகம் கூடுதல், வேளாண்மை விளைச்சளின் மாற்றங்கள் என்பவை எதிர்பார்க்கப்படும் சில விளைவுகளாகும்.

புவி சூடாதலினைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் (சிலர் ஒன்றும் தேவையில்லை எனவும் கருதுகின்றனர்) கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. புவி சூடாதல் விளைவுகளை தடுப்பதற்கு இப்போதைக்குள்ள முறைகளாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைத்தல், சூடாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளிற்கு ஏற்வாறு மாறிக்கொள்ளல் என்பன முக்கியமானவையாகும். வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைக்கும் நோக்குடைய கியோத்தோ நெறிமுறையில் பல நாடுகள் கைச்சாத்திட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.

மேலும் விரிவாக படிக்க கீழ்கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க

1.புவி சூடாதல் பற்றிய கட்டுரை

Wednesday, November 18, 2009

இணையத்தின் வரலாறு


இணையத்தின் வரலாறு

1957 களில் சோவியத் அரசு தனது ஸ்புட்னிக் என்னும் செயற்கைகோளை விண்ணில் ஏவி, வெவ்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் தொடர்புகொள்வதற்கான செயற்கைகோள் சார்ந்த ஒரு தொலைத்தொடர்புவலை அமைப்பை ஏற்படுத்தியது. இதனைக்கண்டு அதிர்ந்த அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை, ARPA அதாவது Advanced Research Projects Agency என்ற ஒரு புதிய அமைப்பை உறுவாக்கி, அதனிடம் கணினி சார்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பை ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டது.

கணினியை ஒரு கணக்குப்போடும் எந்திரமாகவெ பாவித்துவந்த அக்காலத்தில் அதனை ஒரு அதிவிரைவுத்தகவல் பரிமாற்ற சாதனமாக்கும் தனது நீண்ட நெடிய ஆராய்ச்சியில் இறங்கியது ARPA அமைப்பு. வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைப்பதற்கான கேட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன, தொலைதுரக் கணினிகளை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இணைப்பதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக 1968 ஜூன் மாதம் ARPA தனது ஆராய்ச்சியின் முடிவான ARPANET என்னும் கணினி வலையமைப்பினை அரசின் பார்வைக்குக் கொண்டுவந்தது.

இவ் ARPANET வலையமைப்பின் சிறப்பம்சங்கள் யாதெனில் இது வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை வெவ்வேறு வழிகளில் ஒன்றாக இணைக்கிறது அதனால் ஒரு பகுதியில், இணைப்பில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ, அல்லது போர்க்காலங்களில் ஒருபகுதி வலையமைப்பே துண்டிக்கப்பட்டாலோ பிற பகுதி எந்த விதப்பதிப்பும் இன்றி தகவல் தொடர்புக்குப்பயன்படும். ஏதோனும் ஒரு வழியை நம்பிக்கொண்டிருக்கவேண்டியது இல்லை.

(நம்முடைய இணையமும் அவ்வாறே! உலகின் ஒரு பகுதியே அழிந்து பட்டாலும் மற்றொரு பகுதி எந்த வித பாதிப்பும் அடையாமல் தன்னுடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கும். இதற்குக்காரணம் இணையத்தில் பயன்படுத்தும் TCP/IP போன்ற கோட்பாட்டு மென்பொருள்களும், Router போன்ற சாதனங்களும் தகவல் பொட்டலங்களை அனுப்பும் போது பாதைகள் பாதிப்படையாமல் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டே அனுப்புகின்றன எனவே அப்பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட உலகப்பகுதிக்குள் சென்று காலங்கடத்தும் வாய்ப்பே இல்லை)

அடுத்ததாக இவ்வமைப்பு வெவ்வேறு வகையைச்சார்ந்த, வேறுபட்ட அமைப்பில் உருவாக்கப்பட்ட அதாவது நாம் பயன்படுத்தும், IBM வகைத் தனிக்கணினிகள் APPLE MAC வகைக் கணினிகள், MAINFRAME, அதிவிரைவுக்கணிகள்(SUPER COMPUTER) மற்றும் MINIக்கணினிகள் போன்ற கணினிகளையும் ஒன்றாக இணைத்து அவற்றிற்கு இடையிலும் தகவல்களைச் செலுத்தும் வல்லமை உடையதாக அமைக்கப்பட்டது இதனை ஆங்கிலத்தில் Machine Independant என்று கூறுவது உண்டு.

அதுமட்டுமல்லாது இது வேறுபட்ட வினைக்கலன்கள்(Operating System)பயன்படுத்தப்படும் கணினிகளயும் வெற்றிகரமாக இணைக்கும்படியும் உறுவாக்கப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் Platform Independant என்று கூறுவது வழக்கம்.

இத்தகைய ARPANET முதலில் அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், பின்பு ஆராய்ச்சிக்கான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பொருட்டு அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி அதைத்தம்மோடு ஒன்றாக இணைத்துக்கொண்டது- பின்னர் இது வியாபார நோக்கில் அமெரிக்க நிறுவணங்களை தம்மோடு இணைத்துப் பின்.......உலகமெல்லாம் பரவி இணையம் என்னும் பெயரில் வழங்கப்படலாயிற்று.

இப்பொழுது இவ்விணையம் யாருக்குச்சொந்தம் ?

குறிப்பிட்ட யாருக்கும் சொந்தமல்ல, அந்தெந்த நாடுகளின் இணையத் தொடர்பை அந்தெந்த நாடுகளே கவணித்துக்கொள்கின்றன, மற்ற நாடுகளுடனான அந்நாட்டின் தொடர்பை அவ்விரு நாடுகளும் ஒழுங்குபடுத்திக்கொண்டுள்ளன இருந்தாலும் வலைத்தளங்களின் பெயர், தகவல் பரிமாறும் கணினிகளின் IP முகவரி போன்றவை தனிச்சீர்மை(unique) பெற்றவையாதலால் அவை உலகளவில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன

அதற்காக The Internet Corporation for Assigned Names and Numbers மற்றும் Internet Assigned Numbers Authority போன்ற உலகலாவிய ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் செயல்பட்டு அவற்றை நெறிப்படுத்துகின்றன.

Monday, November 16, 2009

சுஜாதாவின் நூல்கள் மற்றும் நாவல்கள் PDF வடிவில் உங்களுக்காக:

சுஜாதாவின் நூல்கள் மற்றும் நாவல்கள் PDF வடிவில் உங்களுக்காக:
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க .....

1.சுஜாதா -வாழ்க்கை வரலாறு

2.சுஜாதாவின் -குறுகதைகள்
3..சுஜாதாவின் -அனாமிகா
4.சுஜாதாவின் -எப்படியும் வாழலாம்
5.சுஜாதாவின்-ஒரு விஞ்ஞானபார்வை
6. சுஜாதாவின்-பிரிவோம் சந்திப்போம் பாகம் 2
7. சுஜாதாவின்-நகரம்
8.சுஜாதாவின் -பேப்பரில் போர்
9. சுஜாதாவின்-பில்மோத்சவ்
10.சுஜாதாவின்-கடவுள் இருக்கிறாரா?
11.சுஜாதாவின்-கற்றதும் பெற்றதும்
12.சுஜாதாவின்-மெரினா குறுநாவல்
13.சுஜாதாவின்-நயாகரா
14.சுஜாதாவின்-வேதாந்தம்
15.சுஜாதாவின்-ஏன் ?எதற்கு ?எப்படி ?
16.சுஜாதாவின்-கணையாழியின் கடைசி பக்கங்கள்

Saturday, November 14, 2009

கவிபேரரசு வைரமுத்துவின் மிக சிறந்த நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்.

கவிபேரரசு வைரமுத்துவின் மிக சிறந்த நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்.
கீழ்கண்ட நூல்களின் மேல் சொடுக்கி பதிவிறக்கம் செய்க .....

1.வைரமுத்துவின்- தண்ணீர் தேசம்

2.வைரமுத்துவின் -கருவாச்சி காவியம்

3.வைரமுத்துவின்-கவிதைகள்

Thursday, November 12, 2009

ஓபன் மென்டார்: இணைய வழியில் இலவசக் கல்வி


ஓபன் மென்டார் (www.openmentor.net) என்பது புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை. எந்தப் பாடத்தையும், எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல் கற்கலாம்; அதே போல் கற்பிக்கலாம். "யாவர்க்கும் இலவசக் கல்வி' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. இதனை சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் சென்னை ஆன்லைனும் இணைந்து வழங்குகின்றன.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இந்த முறையை நடைமுறைப் படுத்தினால் பற்பல பயன்கள் விளையும். இருந்த இடத்திலிருந்தே ஆசிரியர் பாடம் நடத்தலாம். அதை மாணவர்களும் இருந்த இடத்திலிருந்தே கவனிக்கலாம். இருவருக்கும் பயணம், நேரம், செலவு, அலைச்சல் மிச்சமாகும்.

இன்னொரு வசதி, ஒரு பள்ளியின் மாணவர்கள், வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட துறையில் ஆசிரியர்களின் நிபுணத்துவம், உலகம் முழுக்கப் பயன்படுகிறது. வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் உள்ள ஆசிரியர்களையும் இந்த வகையில் நம் உள்ளூர் மாணவர்களுடன் இணைக்க முடியும். வீடுகளில் இருந்து மாணவர்கள் கற்கும் போது, அவர்களின் பெற்றோரும் இந்த வகுப்புகளைக் கவனிக்க வாய்ப்புண்டு.

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்கள், பல உண்டு. இத்தகைய பள்ளிகளுக்கு இந்தக் கல்வி முறை, அற்புத வரம் என்றே கொள்ளலாம்.

கணினி முன் இருந்து, இணைய வழியில் கல்வி கற்பிக்கையில் ஆசிரியர் குரல் மூலம் பேசலாம்; கரும்பலகையில் எழுதுவது போலவே, ல்ங்ய் ற்ஹக்ஷப்ங்ற் என்ற கணிப் பலகையில் எழுதலாம்; ஒலிþஒளிக் கோப்புகளைத் திரையிட்டுக் காட்டலாம்; பவர் பாய்ன்ட் முறையில் சில வகுப்புகளை நடத்தலாம்; அனிமேஷன், கிராஃபிக்ஸ் காட்சிகளையும் திரையில் காட்டலாம்; பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் விளக்க இந்தக் காட்சி வழிக் கற்பித்தல் பெரிதும் உதவும். þவகுப்பு இல்லாத நேரத்திலும் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பிப் பதில்களைப் பெறலாம்.

இப்படி எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்ட இந்த þகற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களும் பள்ளி - கல்லூரி -பல்கலைக் கழகங்களும் தங்களைத் தகவமைத்துக் கொண்டால் பெரிய கல்விப் புரட்சியே நிகழும் என்பது உறுதி.

இதற்கு என்னென்ன தேவை? கணினி, இணைய இணைப்புடன் அரங்கு, ஒலிபெருக்கி வசதி, LCD Projector, திரை ஆகியவை இருந்தால் போதும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், ஒரே வகுப்பில் இணைந்து கொள்ளலாம்.

மாணவர் நோக்கில், இதற்கென்று தனிச் செலவு ஏதுமில்லை. ஒரு கணினியும் இணைய இணைப்பும், தலைப்பேசி (ஹெட்போன்) வசதியும் இருக்க வேண்டும். அகலக் கற்றை இணைய இணைப்பு (பிராட்பேண்ட்), அவசியம் தேவை. டயல்-அப் இணைப்பு, இந்த -வகுப்புக்குப் போதாது. இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் போதும். அவர், -வகுப்புக்குத் தயார்.

மாணவர், www.openmentor.net என்கிற இணைய தளத்திற்குச் சென்று தன் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொண்டு பதிய வேண்டும். அந்தத் தளத்தில் ஒவ்வொரு மாதமும், பல்வேறு விதமான பாடங்களில், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும். அதில் எந்தப் பாடங்களில் அவருக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதில் சேர்ந்து கற்கலாம். அவர் தேர்ந்தெடுக்கும் பாடம் நடைபெறும் வகுப்பு குறித்த தகவலை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.

இதில் ஒவ்வொரு வகையான மாணவர்க்கும் அவர்களுக்கு ஏற்ற விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன. ஒரே மாணவர் எவ்வளவு வகுப்புகளில் வேண்டுமானாலும் சேர்ந்து பயன் பெறலாம். இது முற்றிலும் இலவசம். ஆசிரியர்கள், மாணவர் முன் நின்று எடுக்கும் அதே வகுப்பினைக் கணினி முன் அமர்ந்து எடுத்தால், அதை உலகமே காண முடியும்.

ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களும், இதைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.

மூலம் :வடக்குவாசல்