Sunday, November 7, 2010


தமிழ் நூல்கள் வரிசையில் முதல் முதலாக ஆங்கில நூல் ஒன்றை பதிவு செய்துள்ளேன் .இது பிரபல ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் அவர்களின் கீழ்க்கண்ட பதினெட்டு நாவல்களின் தொகுப்பு.


1.The Naked Face (1970)
2.The Other Side of Midnight (1973)

3.A Stranger in the Mirror (1976)

4.Bloodline (1977)

5.Rage of Angels (1980)

6.Master of the Game (1982)

7.If Tomorrow Comes (1985)

8.Windmills of the Gods (1987)

9.The Sands of Time (1988)

10.Memories of Midnight (1990)

11.The Doomsday Conspiracy (1991)

.The Stars Shine Down (1992)
13.Nothing Lasts Forever (1994)

14.Morning, Noon and Night (1995)

15.The Best Laid Plans (1997)

16.Tell Me Your Dreams (1998)
17.The Sky is Falling (2001)

18.Are You Afraid of the Dark? (2004)


பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்க் ஐ சொடுக்கி பதிவிறக்கம் செய்க சிட்னி ஷெல்டனின் பதினெட்டு நாவல்களின் தொகுப்பு

Saturday, November 6, 2010

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் உங்களுக்காக PDF வடிவில்

நூல்களை பதிவிறக்கம் செய்ய நூல்கள் மேல் சொடுக்கவும் ...நல்ல நூல்களை படிப்போம் ...பண்படைவோம்...நண்பர்களுக்கும் சொல்வோம் ..

1.கற்பனையோ... கைவந்ததூ
2.நித்தமும் உன் நினைவு
3.வளர்பிறைக் கனவுகள்
4.நேச
நதிக்கரையில்

கருத்துகளை பின்னூட்டமிடுங்கள் ...

மேலும் சில நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்


மேலும் சில நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்.நூல்களை பதிவிறக்கம் செய்ய நூல்கள் மேல் சொடுக்கவும் ...நல்ல நூல்களை படிப்போம்.....பண்படைவோம்...நண்பர்களுக்கும் சொல்வோம் ..


1.தமிழ் சினிமா :அமுதும் நஞ்சும் -சுதேசமித்திரன்
2.கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா.
3.ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்-மாவோவின் வரலாறு
4.அயல் சினிமா-எஸ். ராமகிருஷ்ணன்
5.வாசகர் பர்வம்' எஸ். ராமகிருஷ்ணன்

கருத்துகளை பின்னூட்டமிடுங்கள் ...

Thursday, November 4, 2010

பல்சுவை நூல்கள் உங்களுக்காக ...படப் வடிவில்


உங்கள் அறிவு பசிக்காக சில நூல்களை பதிவிட்டுள்ளேன் .நூல்களை பதிவிறக்கம் செய்ய நூல்களின் மேல் சுட்டி பதிவிறக்கம் செய்க ..தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி ...


1 . காலந்தோறும் பெண் -ராஜம் கிருஷ்ணன்
2 .காஷி ஆனந்தன் கதைகள் -ஒரு தொகுப்பு
3 .எருமை தமிழர்கள் -முனைவர்.திருமுருகன்
4 .புவி -ஆசிரியர் :வல்லிபுரம்
5 .பாரதியின் மெய்ஞானம்-நா.ரவீந்திரன்
6 .உடலும் உணர்வும் -சிறுகதை -சியாங்லியாங், ஷாங்
7 .உலக வரலாற்று தகவல் களஞ்சியம் -மவ்லவீ முஹம்மத் உஸ்மான் மஃரூஃபீ


நூல்களை படியுங்கள் ...கருத்துகளை பதியுங்கள்

Monday, April 26, 2010

காமராஜர்,சித்தா மற்றும் விவேகானந்தர் கதை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்


நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் அறிவு பசிக்காக சில நூல்களை பதிவிட்டுள்ளேன்.நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட லிங்க் இ சொடுக்குக.

1.எடையை காத்து நலத்தை பேணுங்கள் -மருத்துவர்.முருகானந்தம்
2.காலை முதல் மாலை வரை (சித்தா நூல் ) -மருத்துவர்.காசி பிச்சை
3.உயர்ந்த மனிதர் காமராஜர் -காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் ஒரு தொகுப்பு
4.காலத்தை கடந்து வந்த கதைகள்-REV-.அய்யாதுரை
5.விவேகானந்தரின் விவேக கதைகள்

Monday, February 8, 2010

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி!

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி!

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.

இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

http://www.youtube.com/results?search_query=thillana+remix&search_type=&aq=f இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும். http://www.3outube.com/results?search_query=thillana+remix&search_type=&aq=f அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

Saturday, January 9, 2010

குவிந்த புரோகிராம்களை நீக்க...

இணையத்தில் பல்வேறு வசதிகளைத் தரும் எக்கச்சக்கமான புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை இலவசமாகக் கிடைப்பதால், நாம் உடனே டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் சில நாட்களில் அதனை மறந்துவிடுகிறோம்; தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. இப்படி பல புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் தங்கிவிடுகின்றன. இவற்றை எப்போதாவது, கண்ட்ரோல் பேனல் சென்று, ஆட்/ரிமூவ் பிரிவின் மூலம் ஒரு சிலவற்றை நீக்குகிறோம். அப்படி நீக்கும் போதும், அந்த புரோகிராம் சார்ந்த சில ரெஜிஸ்ட்ரி வரிகள் தங்கிவிடுகின்றன. சில பைல்களும் அவ்வாறே கம்ப்யூட்டரில் வைக்கப்படுகின்றன. இதனால் கம்ப்யூட்டரின் செயல்வேகம் மெதுவாகிறது. சில மோசமான வேளைகளில், புரோகிராம்கள் முடங்கியும் போகின்றன.
இது போன்ற குறைகளை நீக்கித் தேவையற்ற புரோகிராம்களை முழுமையாக நீக்க இணையத்தில் Absolute Uninstaller என்ற புரோகிராம் கிடைக்கிறது. இது ஆட்/ரிமூவ் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை மேற்கொண்டாலும், அதனைக் காட்டிலும் கூடுதல் திறனுடன் செயல்படுகிறது. தேவையற்ற ரெஜிஸ்ட்ரி கீகள், சார்ந்த டெஸ்க்டாப் ஐகான்கள், ஸ்டார்ட் மெனுவில் எழுதப்பட்ட என்ட்ரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது.
இந்த புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை நீக்கும்போது, அழிக்காமல் விடப்படும் பைல்களைக் கண்டறிந்து முழுமையாக அழிக்கிறது. தானாகவே தேவையற்ற பைல் எண்ட்ரிகளின் இடமறிந்து காட்டுகிறது.
இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை, அவற்றிற்கான ஐகான்களுடன் தெரிவிக்கிறது. இதன் மூலம் நாம் நீக்கப்பட வேண்டிய புரோகிராம்களை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கும் வகையில் அவற்றின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் நீக்குவதற்கான கட்டளை கொடுத்தால், மொத்தமாக, அவற்றின் சுவடே இல்லாமல் நீக்குகிறது.

பொதுவாக ஆட்/ரிமூவ் புரோகிராம் செயல்பட சற்று நேரம், பிடிக்கும். அப்ஸல்யூட் அன் இன்ஸ்டாலர் மிக வேகமாகச் செயல்படத் தொடங்குகிறது. அத்துடன் இதன் இன்டர்பேஸ் மிக எளிதாக இதனை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

http://www.glarysoft.com/au.html?tag=download முகவரியில் உள்ள தளத்தில் சென்று டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். அண்மையில் இதன் புதிய பதிப்பு Absolute Uninstaller 2.8.0.636 2.8.0.636 வெளியாகியுள்ளது.

பைல்களை உருவாக்கிப் பாதுகாப்பது எப்படி?


கம்ப்யூட்டரை இப்போதுதான் பயன்படுத்தத் தொடங்கி உள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது அதில் எப்படி பைல்களை உருவாக்கி, சேவ் செய்வது என்பதுதான்.

கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்படும் ஒவ்வொன்றும், அது டாகுமெண்ட் எனப்படும் ஆவணம், படம், பாட்டு, விளையாட்டு இப்படி எதுவாக இருந்தாலும், அது ஒரு பைலாக சேமிக்கப்பட்டு பதியப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பைலை அதற்கான புரோகிராம் தான் திறந்து காட்ட முடியும். எடுத்துக் காட்டாக டாகுமெண்ட் பைல் ஒன்றை படத்திற்கான கிராபிக்ஸ் புரோகிராம் திறந்து படிக்க இயலாது. மியூசிக் புரோகிராம் ஒன்றினால் டாகுமெண்ட் பைல் ஒன்றைத் திறந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு புரோகிராமிற்கும் அது எந்த பைலைத் திறந்து இயக்க முடியும் என்பது புரோகிராமிங் செய்யப்பட்டு அறிந்து கொள்ளும் வகையில் காட்டப்பட்டிருக்கும். அதாவது ஒவ்வொரு பைலும் குறிப்பிட்ட பைல் டைப் வகையினைச் சேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

இதனை
அறியும் இடம் அந்த பைலின் பெயரை அடுத்து உள்ள முற்றுப் புள்ளியைக் கடந்து எழுதப்படும் எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்ட இடம் தான். எடுத்துக் காட்டாக ‘myletter.doc’ ’என்பது ஒரு பைலின் பெயர். இதில் முதலில் உள்ள myletter என்பது பைலின் பெயர்; doc என்பது அந்த பைல் எத்தகையது என்பதனைக் கூறும் பெயர். இதன் பொருள் என்னவென்றால் இந்த பைலைத் திறக்க doc என்பதைப் புரிந்து கொள்ளும் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற புரோகிராம் வேண்டும் என்பதே.

புரோகிராம் என்று எடுத்துக் கொண்டால் அதில் பல வகையான பைல்கள் அடங்கியிருக்கலாம். இன்றையக் கம்ப்யூட்டர்களில் ஆயிரக்கணக்கான பைல்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பல இடங்களில் பரவி பதியப்பட்டுக் கிடக்கின்றன. இவ்வாறு பரவிக் கிடக்கும் பைல்களை ஒழுங்குபடுத்த போல்டர்கள் (Folders) உதவுகின்றன. எனவே புரோகிராம் ஒன்றின் அனைத்து பைல்களும் ஒரு போல்டரில் இருந்தால் அவற்றை அடையாளம் காண்பது எளிது. போல்டர் ஒன்றின் உள்ளே மேலும் பைல்கள் அடங்கிய துணை போல்டர்கள் (‘subfolders’) இருக்கலாம்.

எடுத்துக்
காட்டாக உங்கள் நிறுவனம் அல்லது அலுவலகம் சார்ந்த பைல்களை Office என்னும் போல்டரில் வைத்திருக்கலாம். இதன் உள்ளே அலுவலர்கள், ஊதியம், போனஸ் என்பது போன்ற பல துணை போல்டர்கள் இருக்கலாம். போல்டர் ஒன்றை நீங்களே உருவாக்கலாம்; குறிப்பிட்ட போல்டர்களை எளிதாகக் கண்டறிய ஷார்ட் கட் வழிகளையும் நீங்களே உருவாக்கலாம். இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைப் பார்க்கலாம். உங்கள் டெஸ்க் டாப்பில் (My Documents) என்ற ஷார்ட்கட் உடன் கூடிய ஐகான் இருக்கும். இதன் மீது மவுஸைக் கொண்டு இருமுறை கிளிக் செய்தால் My Documents என்னும் போல்டரில் உள்ள மற்ற போல்டர்களையும் பைல்களையும் காணலாம். My Documents என்பது உங்களுக்காகத் தானாக உருவாக்கப்பட்ட பெரிய போல்டராகும்.

நீங்கள்
உருவாக்கும் அனைத்து பைல்களையும் பிரித்து பல குழுக்களாக வைத்திட மை டாகுமெண்ட்ஸ் உதவுகிறது. எடுத்துக் காட்டாக மை டாகுமெண்ட்ஸ் போல்டரிலேயே மைமியூசிக், மை பிக்சர்ஸ், மை வீடியோஸ் போன்ற சப் போல்டர்கள் நம் தேவைக்காகவே உள்ளன. ஆனால் நாம் உருவாக்கும் பைல்களைக் கட்டாயம் இதில் தான் சேமித்து வைக்க வேண்டியதில்லை. எந்த போல்டரில் வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம். பைல்களை எளிதில் பின்னர் தேடும் வகையில் போல்டர்களை உருவாக்கி அவற்றை எளிதாக அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்து வைக்கலாம். அதே போல தேவையற்ற போல்டர்களை அழித்துவிடவும் வேண்டும். இல்லை எனில் பைல்களே இல்லாத போல்டர்கள் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும்.

பைல்களைத் தேடும் வழிகள்: கம்ப்யூட்டரில் பைல்களைப் பல வழிகளில் தேடலாம். பலர் தங்கள் பைல்கள் எங்கிருக்கின்றன என அறியவும் அவற்றைத் திறக்கவும் மை கம்ப்யூட்டர் ஐகானைப் பயன்படுத்துகின்றனர். டெஸ்க் டாப்பில் இந்த ஐகான் மீது கிளிக் செய்தால் பைல்கள் பாதுகாத்து பதியப்பட்டு இருக்கும் பல்வேறு இடங்கள் காட்டப்படும். இதில் ‘C’ டிரைவ் மீது கிளிக் செய்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து பைல்களும் அல்லது அவை இருக்கும் போல்டர்களும் காட்டப்படும். வேறு எக்ஸ்ட்ரா டிரைவ் இல்லை என்றால் இதில் மட்டுமே பைல்களும் போல்டர்களும் இருக்கும். ஆனால் ‘C’ தவிர ‘D’, ‘E’, ‘F’ என டிரைவ்கள் இருப்பின் அந்த எழுத்துக்கள் மீது கிளிக் செய்து அந்த அந்த டிரைவில் உள்ள போல்டர்களையும் பைல்களையும் காணலாம். ‘C’ டிரைவில் அனைத்து போல்டர்களும் காட்டப்பட்டாலும் ஒரு சில போல்டர்கள் நீங்கள் திறந்து பார்க்கக்கூடாத போல்டர்களாக இருக்கும். இவற்றை நீங்கள் திறக்க முயற்சிக்கையில் இந்த பைல்கள் இயக்கத்திற்கு ஆதாரமானவை; எனவே திறக்க முயற்சிப்பது சிக்கலை உண்டாக்கும் என்பது போன்ற எச்சரிக்கை செய்திகள் காட்டப்பட்டு அந்த போல்டர்கள் திறக்கப்படும். பொதுவாக இது போன்ற எச்சரிக்கை செய்திகள் வந்தபின்னர் திறக்கப்படும் போல்டர்களில் உள்ள பைல்களை எடிட் செய்திடக் கூடாது; அழிக்கவும் கூடாது. இவற்றில் புரோகிராம் பைல்கள் மற்றும் சிஸ்டம் பைல்கள் அடங்கிய போல்டர்களும் விண்டோஸ் போல்டர்களும் இருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு மிக முக்கியமானவை. இவற்றை திறப்பதுவும் திருத்துவதும் கூடாது. விண்டோஸ் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க, இவை அப்படியே பதிந்த நிலையில் இருப்பது அவசியம்.

பைல்களையும் போல்டர்களையும் காட்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்க விண்டோஸ் (Windows+E) கீகளை அழுத்தலாம். அல்லது Start பட்டனில் ரைட் கிளிக் செய்து அதில் மேல் எழும் மெனுவில் இரண்டாவதாக உள்ள பிரிவில் கிளிக் செய்யலாம்.

எல்லா பைல்களும் டிஸ்க் ஸ்பேஸ் எடுத்துக் கொள்கின்றன. நாம் ஹார்ட் டிஸ்க்கில் தானே எழுதுகிறோம். எனவே எந்த அளவு இடத்தை இவை எடுத்துக் கொள்கின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே. எவ்வளவு ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸை தற்போது உள்ள பைல்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றன? இன்னும் எவ்வளவு இடம் உள்ளது? என்று அறிந்து கொள்ள மை கம்ப்யூட்டரை டபுள் கிளிக் செய்த பின் டிரைவிற்கான எழுத்தில், எடுத்துக்காட்டாக சி:, டபுள் கிளிக் செய்திடாமல் ரைட் கிளிக் செய்திடுங்கள். இதில் கிடைக்கும் மெனுவில் கீழாக உள்ள புராபர்ட்டீஸ் என்பதில் கிளிக் செய்தால் டிஸ்க் வட்டவடிவமாகக் காட்டப்பட்டு அதில் பயன்படுத்தப்பட்ட இடமும் காலியாக உள்ள இடமும் காட்டப்படும். எவ்வளவு அளவு என்பது மேலாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். டிஸ்க்கில் இடம் குறைந்து அடுத்து வரும் பைல்களை எழுதுவது சிரமமாக இருக்கும் என்று எண்ணினால் உடனே தேவையற்ற பைல்களை நீக்கலாம். நீக்க வேண்டிய பைல்களை அடையாளம் கண்டு கொண்டால் அவை இருக்கும் டிரைவ் மற்றும் போல்டர் சென்று பைலின் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Delete பட்டனை அழுத்தினால் பைல் அழிக்கப்படும். ஆனால் அவ்வாறு அழிக்கப்படும் பைல்கள் கம்ப்யூட்டரில் உள்ள ரீசைக்கிள் பின்னில் சென்று அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் தவறான பைலை அழித்துவிட்டு பின் மீண்டும் அதனை வேண்டும் என உணர்ந்தால் அதனை மீட்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லுமுன் இந்த பைலை அழிக்க வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டு பின் தான் அந்த பைல் அழிக்கப்படும். அப்படியே அழிந்தாலும் அது ரீசைக்கிள் பின்னில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாம் இடம் காலியாக வேண்டும் என்று அழிக்கையில் மீண்டும் அந்த பைலை ரீ சைக்கிள் பின்னில் வைத்திட வேண்டிய அவசியமில்லை. எனவே உடனே அதை அங்கிருந்தும் அழித்துவிடலாம். ரீசைக்கிள் பின் ஐகானை அழுத்தி கிடைக்கும் மெனு மூலம் பைலை அழிக்கலாம். அல்லது முதலில் பைலை அழிக்க முயற்சிக்கையிலேயே ஷிப்ட் கீ அழுத்தி டெலீட் கீ அழுத்தினால் பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் அழிக்கப்படும். ஆனால் இதனை நாம் திரும்பப் பெற முடியாது.