Posts

Showing posts from 2017

இனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...

Image
                 அண்மை  காலமாக சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து இந்தியா போன்ற வளரும்  நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களிடையே தயாரிப்புகளான சுகர் பிரீ  பிஸ்கட்  முதல் சுகர் பிரீ  டானிக்  வரை கூவி விற்கின்றன.              ஆனால் இனிப்பு துளசி என்கிற Stevia rebaudiana  மூலிகை  பயிரானது சர்க்கரை நோயாளிகளுக்கு பாரம்பரிய கரும்பு  சர்க்கரைக்கு  மாற்றான சர்க்கரையாக பரிந்துரைக்கப்படுகிறது . இனிப்பு துளசி பற்றிய ஒரு அறிமுகம் :           சீனித்துளசி  அல்லது  சர்க்கரைத் துளசி  ( Stevia rebaudiana ) என்பது  சூரியகாந்தி குடும்ப அங்கத்தின்ஒரு பிரிவான  சிடீவியா  எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இனிப்புத் தன்மையைக்கொண்டுள்ள இத்தாவரத்தை, பொதுவாக  மிட்டாய்  இலை ( candy leaf ),  இனிப்பு  இலை ( sweet leaf ) மற்றும்  சர்க்கரை  இலை ( sugar leaf ) எனவும் பிராந்தியப் பெயரால் அழைக்கப்படுகிறது.      தென் அமெரிக்கா  நாடுகளான  பிரேசில் , மற்றும்  பராகுவே  போன்ற மென்மையான ஈரப்பதம் மிகுந்த பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடிய இந்த சீனித்துளசி, ஈரமான சூழ்நிலையில் வளர்ந்தால