இனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...

அண்மை காலமாக சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களிடையே தயாரிப்புகளான சுகர் பிரீ பிஸ்கட் முதல் சுகர் பிரீ டானிக் வரை கூவி விற்கின்றன. ஆனால் இனிப்பு துளசி என்கிற Stevia rebaudiana மூலிகை பயிரானது சர்க்கரை நோயாளிகளுக்கு பாரம்பரிய கரும்பு சர்க்கரைக்கு மாற்றான சர்க்கரையாக பரிந்துரைக்கப்படுகிறது . இனிப்பு துளசி பற்றிய ஒரு அறிமுகம் : சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி ( Stevia rebaudiana ) என்பது சூரியகாந்தி குடும்ப அங்கத்தின்ஒரு பிரிவான சிடீவியா எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இனிப்புத் தன்மையைக்கொண்டுள்ள இத்தாவரத்தை, பொதுவாக மிட்டாய் இலை ( candy leaf ), இனிப்பு இலை ( sweet leaf ) மற்றும் சர்க்கரை இலை ( sugar leaf ) எனவும் பிரா...