காலத்தின் அருமை

                         காலத்தின் அருமை

மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப் பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து “நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்” என்று கேட்டார் போப். “ஆறு மாதம்” என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றி பார்க்க மாட்டீர்கள்… முடியாது என்றார் போப். அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம் தான் தங்கப் போகிறேன் என்றார். “நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள்” என்றார் போப். பிறகு மூன்றாமவரைப் பார்த்து “நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம் என்றதும், அவர் “ஒரு வாரம் தான் எனக்கு விடுமுறை… அதற்குள் நான் எப்படியாவது இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்”. போப்பாண்டவர் சிரித்தபடி “ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…” என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். “நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப் படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்” என்று அழகான விளக்கம் அளித்தார்.

“பிறகு”, “பிறகு” என்று ஒத்தவைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.

 


நன்றி கொல்லிமலை ஆனந்தன்....

Comments

 1. Well and quit. i am very happy to see your blog and archives like this." who are having idle time ,they are writing and who are having leisure time ,they are reading these things mean time sending comments also

  ReplyDelete
 2. உங்க கதையை படிச்சிட்டு பிறகு போடலாம்னு நெனச்ச கமெண்டை இப்பவே போட்டுட்டேன் ,, சரி கமெண்ட் எங்கன்னு கேக்குறீங்களா அதான் போட்டாச்சே ..

  ReplyDelete
 3. கருத்து... கருத்து...

  ReplyDelete
 4. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

  ReplyDelete
 5. உங்களுடைய பரிந்துரைக்கு நன்றி ....settings மாற்றிவிட்டேன் ..நண்பரே

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்