நேனோ டெக்னாலஜியின் புதிய சகாப்தம்-அப்துல்கலாம் கட்டுரை


தகவல்
தொழில்நுட்பத்தின் மூலம் உயிரி தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. மருத்துவம், அறிவியல், இயற்பியல் துறைகளில் நேனோ டெக்னாலஜி, புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நுண்ணிய சிக்கல்களை கொண்டு, மாபெரும் சாதனைகள் புரிய, நேனோ டெக்னாலஜி அறிவியல் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதன் நோயின்றி, வாழ்வதற்கு இப்புதிய அறிவியல் வழிகாட்டியுள்ளது. எல்லை இல்லாத ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நவீன உயிரியல் வழிவகுத்துள்ளது.

அணு ஆராய்ச்சியில் இயற்பியலும் வேதியலும் தங்களுக்கென்று பங்கு வகிக்கின்றன. இதே போன்று உயிரியலில் நேனோ அணுக்களை கோர்வைப்படுத்தும் முயற்சியில் இன்றைய அறிவியல் ஆராய்ச்சி வளர்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் உள்ள சர்வதேச உயிரி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மரபியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளன.

கருவில் வளரும் குழந்தைகளுக்கு இதய குழாய்களில் உள்ள நோய்களையும் நரம்பியல் பாதிப்புகளையும் தடுப்பதற்கு மரபியல் பொருள் ஒன்றை செலுத்துவதற்கான நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் மனிதனை தாக்கும் நோய்களிலிருந்து விடுபட இவ்வகையான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் தர வேண்டும்.

தாவரங்கள் மற்றும் விவசாயம், அறிவியல், மருத்துவம் மற்றும் நோய்கள் தொடர்பான ஆராய்ச்சி உயிரி மூலக்கூறு மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பம் போன்றவற்றிலும் தேசிய அதிநவீன ஆராய்ச்சி மையம் பல பரிந்துரைகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தேசிய மற்றும் சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டும். பார்க்கின்சான் நோய் சிகிச்சையில் நேனோ டெக்னாலஜி உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மூளை ஆராய்ச்சி மையம் அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்களை கொண்ட குழுவை அமைத்து அமெரிக்காவிலுள்ள பென் ஸ்டேட் பல்கலைகழகத்துடன் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலக சந்தையில் இந்தியா 12 சதவீத பருத்தி உற்பத்தி செய்து வருகிறது. எனினும் இந்திய விவசாயிகள் அதிக சாகுபடி செய்ய வில்லை. தாவர மரபணு ஆராய்ச்சியாளர்கள், நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்கக்கூடிய பருத்தி ரகத்தை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில்
ஈடுபட திட்டம் உள்ளது.

இந்திய விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்ப வல்லுனர்கள், உலக அளவில் வெளியாகும் மீத்தேன் வாயுவை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இந்த வாயுவை பயனுள்ளதாக்க ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...


நன்றி :தினமலர்

Comments

Popular posts from this blog

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்