நா.பார்த்தசாரதி படைப்புகள் உங்களுக்காக PDF வடிவில்

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 11932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், குறிஞ்சி மலர்.

1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.

1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், ராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து சுந்தரக் கனவுகள் என் தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.
பயணக் கட்டுரைகளும் நா.பா. நிறைய எழுதினார். ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
சாகித்ய அகாதமி பரிசு (சமுதாய வீதி), ராஜா சர் அண்ணாமலை பரிசு (துளசி மாடம்), தமிழ்நாடு பரிசு போன்ற பல பரிசுகளும் விருதுகளும் பெற்றிருக்கிறார்.
நாற்பத்தைந்து வயதிற்குமேல் எம்.. படித்துத் தேறி, டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என் தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் டாக்டர் பட்டம் கிடைக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார்.

அவரின் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்க் கிளிக் செய்க

1.நா.பார்த்தசாரதி சிறுகதை-கொத்தடிமைகள்


2.நா.பார்த்தசாரதி நாவல் -குறிஞ்சி மலர்

3.நா.பார்த்தசாரதி சிறுகதை -ராஜதந்திரிகள்

4. நா.பார்த்தசாரதி சிறுகதை -ஹை பவர் கமீட்டி

Comments

Popular posts from this blog

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்

காமராஜர்,சித்தா மற்றும் விவேகானந்தர் கதை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்