ஓபன் மென்டார்: இணைய வழியில் இலவசக் கல்வி


ஓபன் மென்டார் (www.openmentor.net) என்பது புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை. எந்தப் பாடத்தையும், எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல் கற்கலாம்; அதே போல் கற்பிக்கலாம். "யாவர்க்கும் இலவசக் கல்வி' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. இதனை சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் சென்னை ஆன்லைனும் இணைந்து வழங்குகின்றன.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இந்த முறையை நடைமுறைப் படுத்தினால் பற்பல பயன்கள் விளையும். இருந்த இடத்திலிருந்தே ஆசிரியர் பாடம் நடத்தலாம். அதை மாணவர்களும் இருந்த இடத்திலிருந்தே கவனிக்கலாம். இருவருக்கும் பயணம், நேரம், செலவு, அலைச்சல் மிச்சமாகும்.

இன்னொரு வசதி, ஒரு பள்ளியின் மாணவர்கள், வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட துறையில் ஆசிரியர்களின் நிபுணத்துவம், உலகம் முழுக்கப் பயன்படுகிறது. வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் உள்ள ஆசிரியர்களையும் இந்த வகையில் நம் உள்ளூர் மாணவர்களுடன் இணைக்க முடியும். வீடுகளில் இருந்து மாணவர்கள் கற்கும் போது, அவர்களின் பெற்றோரும் இந்த வகுப்புகளைக் கவனிக்க வாய்ப்புண்டு.

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்கள், பல உண்டு. இத்தகைய பள்ளிகளுக்கு இந்தக் கல்வி முறை, அற்புத வரம் என்றே கொள்ளலாம்.

கணினி முன் இருந்து, இணைய வழியில் கல்வி கற்பிக்கையில் ஆசிரியர் குரல் மூலம் பேசலாம்; கரும்பலகையில் எழுதுவது போலவே, ல்ங்ய் ற்ஹக்ஷப்ங்ற் என்ற கணிப் பலகையில் எழுதலாம்; ஒலிþஒளிக் கோப்புகளைத் திரையிட்டுக் காட்டலாம்; பவர் பாய்ன்ட் முறையில் சில வகுப்புகளை நடத்தலாம்; அனிமேஷன், கிராஃபிக்ஸ் காட்சிகளையும் திரையில் காட்டலாம்; பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் விளக்க இந்தக் காட்சி வழிக் கற்பித்தல் பெரிதும் உதவும். þவகுப்பு இல்லாத நேரத்திலும் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பிப் பதில்களைப் பெறலாம்.

இப்படி எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்ட இந்த þகற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களும் பள்ளி - கல்லூரி -பல்கலைக் கழகங்களும் தங்களைத் தகவமைத்துக் கொண்டால் பெரிய கல்விப் புரட்சியே நிகழும் என்பது உறுதி.

இதற்கு என்னென்ன தேவை? கணினி, இணைய இணைப்புடன் அரங்கு, ஒலிபெருக்கி வசதி, LCD Projector, திரை ஆகியவை இருந்தால் போதும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், ஒரே வகுப்பில் இணைந்து கொள்ளலாம்.

மாணவர் நோக்கில், இதற்கென்று தனிச் செலவு ஏதுமில்லை. ஒரு கணினியும் இணைய இணைப்பும், தலைப்பேசி (ஹெட்போன்) வசதியும் இருக்க வேண்டும். அகலக் கற்றை இணைய இணைப்பு (பிராட்பேண்ட்), அவசியம் தேவை. டயல்-அப் இணைப்பு, இந்த -வகுப்புக்குப் போதாது. இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் போதும். அவர், -வகுப்புக்குத் தயார்.

மாணவர், www.openmentor.net என்கிற இணைய தளத்திற்குச் சென்று தன் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொண்டு பதிய வேண்டும். அந்தத் தளத்தில் ஒவ்வொரு மாதமும், பல்வேறு விதமான பாடங்களில், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும். அதில் எந்தப் பாடங்களில் அவருக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதில் சேர்ந்து கற்கலாம். அவர் தேர்ந்தெடுக்கும் பாடம் நடைபெறும் வகுப்பு குறித்த தகவலை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.

இதில் ஒவ்வொரு வகையான மாணவர்க்கும் அவர்களுக்கு ஏற்ற விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன. ஒரே மாணவர் எவ்வளவு வகுப்புகளில் வேண்டுமானாலும் சேர்ந்து பயன் பெறலாம். இது முற்றிலும் இலவசம். ஆசிரியர்கள், மாணவர் முன் நின்று எடுக்கும் அதே வகுப்பினைக் கணினி முன் அமர்ந்து எடுத்தால், அதை உலகமே காண முடியும்.

ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களும், இதைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.

மூலம் :வடக்குவாசல்

Comments

Post a Comment

Popular posts from this blog

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்