புதுமை பித்தன் சிறுகதைகள் PDF வடிவத்தில் உங்களுக்காக...

புதுமை பித்தன் பற்றிய ஒரு சின்ன வாழ்கை குறிப்பு மற்றும் அவருடைய படைப்புகள் PDF வடிவில் உங்களுக்காக....

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகிறது. தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது இவரது படைப்புகள்.
வாழ்க்கைக் குறிப்பு
புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார்.தொடக்கக் கல்வியைச் செஞ்சி,திண்டிவனம்,கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார்.தாசில்தாராக பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லைக் கல்லூரியில் பி. பட்டம்பெற்றார். 1932 ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.

இவரது முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்" காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகளும் பிரசுரமாகத் துவங்கின. இந்த காலக் கட்டதில் அவர் சென்னைக்குக் குடிப்பெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும், சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. சென்னையில் இவர் சில ஆண்டுகள் திணமனியிலும்,பின்பு தினசரியிலும் பணிபுரிந்தார்.

இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார்.ஜெமினி நிறுவனத்தின் "அவ்வை" மற்றும் "காமவல்லி" படங்களில் பணிப் புரிந்தார்.பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கினார்.எம்.கே.டி பாகவதரின் "ராஜமுக்தி" திரைப் படத்திற்காக புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி 5 மே 1948-இல் காலமானார்.


கீழ்கண்ட லிங்க் இல் சொடுக்கி பதிவிறக்கம் செய்க ...
1.புதுமை பித்தன் சிறுகதை1-அகல்யை
2.புதுமை பித்தன் சிறுகதை2-செல்லம்மாள்
3.புதுமை பித்தன் சிறுகதை3-கோபாலன்ஐயங்காரின் மனைவி
4.புதுமை பித்தன் சிறுகதை4-இது மெஷின்யுகம்
5.புதுமை பித்தன் சிறுகதை5-கடவுளின் ஆசை
6.புதுமை பித்தன் சிறுகதை6-கடவுளும் கந்தசாமி பிள்ளையும்
7.புதுமை பித்தன் சிறுகதை7-படபடப்பு
8.புதுமை பித்தன் சிறுகதை8-ஒரு நாள் கழிந்தது
9.புதுமை பித்தன் சிறுகதை9-தெருவிளக்கு
10.புதுமை பித்தன் சிறுகதை10-காலனும் கிழவியும்
11.புதுமை பித்தன் சிறுகதை11-பொன்னகரம்
12.புதுமை பித்தன் சிறுகதை12-இரண்டு உலகங்கள்
4.

Comments

 1. பயனுள்ள முயற்சி..
  தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நண்பரே..

  ReplyDelete
 2. தங்களுடைய கருத்துக்கு நன்றி நண்பரே ....

  ReplyDelete
 3. thanks great work

  ReplyDelete
 4. புதுமைப் பித்தனைப் பற்றி இன்னும் தமிழ்ச் சூழலில் பேச நிறைய இடம் இருக்கிறது. உங்களின் இந்த தகவல் சிறந்தது. பாராட்டக் கூடியது.

  அன்புடன்
  குறிஞ்சிமைந்தன்.

  ReplyDelete
 5. தமிழ் வாசகர் வட்டத்தில் இந்த முயற்சி பெரும் பாராட்டிற்குரியது. மேலும் பல நூல்களைச் சேர்க்க என்னுடைய வாழ்த்துகள்.
  நன்றி.

  நிறைந்த அன்புடன்
  போ. ஜான்சன்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்