குழந்தையின் ஞானம்                                                       
 

        மாலை வேலையில் சுபி ஞானி ஒருவர் ஊர் வழியே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது குழந்தை ஒன்று விளக்கோடு கோயிலுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஞானி குழந்தையைய் மறித்து “இந்த விளக்கிற்கு ஒளி எங்கிருந்து வந்தது?” என்றார். நீர் தான் விளக்கேற்றினீர் என்றது குழந்தை. நான் தான் விளக்கை ஏற்றினேன் ஆனால் ஒளி எங்கிருந்து வந்தது என்று தெரியாது என்றார் ஞானி. பின் குழந்தை விளக்கை ஊதி அனைத்தது. உங்கள் முன்னே ஒளி மறைந்துவிட்டது இப்பொழுது சொல்லுங்கள் “ஒளி எங்கே மறைந்தது” என்று பிறகு “ஒளி எங்கிருந்து வந்தது” என்று நான் கூறுகிறேன் என்றது குழந்தை. அந்தக் குழந்தையின் காலில் விழுந்தார் ஞானி. இனி அத்தகைய கேள்வியைய் கேட்பதில்லை என உறுதியளித்ததர்.
 
        தான் பதிலளிக்க முடியாத கேள்வியைக் கேட்பது முட்டாள்தனம். குழந்தையிடம் மன்னிப்புக் கேட்டு ஒளி எங்கிருந்து வந்தது என்று தெரியாது என்றார்.“விளக்கை விடு” எனக்கு நல்லதே நினைவு படுத்தினாய். என் விளக்கில்(உடல்) அது எங்கு மறையும் என்பதும் தெரியாது. என் விளக்கைப் பற்றி நான் முதலில் படிக்கிறேன் என்று கூறி குழந்தையிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார் ஞானி.
 
“அறிவார்ந்த வாழ்க்கையில் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதுதான் நல்ல ஞானம்”.

Comments

Popular posts from this blog

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்