உணர்வுள்ளதாய்!                                                                                  

                 

இளைய சுமுதாயமே!
உமது கைகள்
வலிமையுள்ளதாக மாறட்டும்!
வாரி உண்பதற்கல்ல
வறுமையை
ஓங்கி அடிக்கத்தான்!
 

 

உமது கால்களில்
வலிமை வளரட்டும்!
பிறரை எட்டி உதைக்க அல்ல!
நாட்டின்
உயர்வுக்கு உழைக்கத்தான்!
 

 

கண்கள் ஒளிபெறட்டும்!
கன்னியரை
சுற்றி அலைய அல்ல!
சுயநலக் கயவர்களை
சுட்டெரிக்கத்தான்!
 

 

நாக்கு வலிமையடையட்டும்!
வசைபாட அல்ல!
வஞ்சகரை
வரித்துரைக்கத்தான்!
 

 

உணர்ச்சிகள் உணர்வுள்ளதாகட்டும்!
உணர்ச்சிவசப்பட அல்ல
உம்மையும் உணர்ந்து கொண்டு
பிறரையும்
உணர்த்தி வாழத்தான்!
 

 

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு 

த.கிருஷ்ணகுமார் நன்றி.... கொல்லிமலை ஆனந்தன்....

Comments

  1. hello friend, how to add the taml calendar and tamilish in my blog

    ReplyDelete

Post a Comment